நீட் தேர்வு தமிழ் வழி ( இளநிலை மருத்துவம் )

நீட் தேர்வு (National Eligibility cum Entrance Test) என்பது பொது மருத்துவம், பல் மருத்துவம் துறையில் சேர்வதற்கு இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வு ஆகும்.

தமிழகத்தில் தமிழில் தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கையும் 17 மடங்கு அதிகரித்துள்ளது நல்ல மாற்றத்தைக் காட்டுகிறது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் தேர்ச்சி விகிதமும் ஆண்டுதோறும் அதிகரித்துவருகிறது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டால், அதிக அளவில் ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் மருத்துவக் கல்வியைப் பெறமுடியும்.

எதிர்வரும் ஆண்டுகளில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அதிக அளவில் நீட் தேர்வில் தேர்ச்சிபெறுவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இந்திய அளவில் உள்ள பல்வேறு மருத்துவப் படிப்புகளுக்கான உள்நுழைவு தகுதித் தேர்வாக நீட் உள்ளது. இத்தேர்வின் மூலம் 85% இளநிலை மருத்துவ இடங்கள் அம்மாநிலத்தின் மாணவர்களுக்காகவும், மீதமுள்ள15% இளநிலை மருத்துவ இடங்கள் அகில இந்திய மாணவர்களுக்காகவும் ஒதுக்கப்படுகின்றன.

மருத்துவ கலந்தாய்வு: 7.5% ஒதுக்கீட்டின் கீழ் 565 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடம். அதேபோல், ராணுவ கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்திவருகிறது.

How to Download Exam Results?

  • neet.nta.nic.in என்ற நீட்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்
  • NEET-UG Results என்று ஒரு பிரிவு கொடுக்கப்பட்டிருக்கும். அதனை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதன் பின்னர் தோன்றும் பக்கத்தில் நம்முடைய வரிசை எண், பிறந்த தேதி மற்றும் அந்தப் பக்கத்தில் காட்டப்பட்டிருக்கும் செக்யூரிட்டி பின் ஆகியவற்றைக் கொடுத்து உள்நுழைய வேண்டும்.
  • நம்முடைய தேர்வு முடிவுகள் அடுத்த பக்கத்தில் காட்டப்படும்.
  • தேர்வு முடிவுகள் காட்டப்பட்டிருக்கும் பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் நம்முடைய தகவல்கள் சரியானது தான எனச் சரிபார்க்க வேண்டும்.
  • பின்னர், நம்முடைய ஸ்கோர்கார்டை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின்பு, தேர்வில் நாம் தகுதி பெற்றிருந்தால் இந்தியா முழுவதும் இருக்கும் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வுக்கு இந்த ஸ்கோர்கார்டைக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.

Purposeful practice

Purposeful practice is the best way to improve your All India NEET rank

All India NEET rank

Proven 3-step success formula to crack NEET

Learn

Learn and Practice from our chapter based questions with detailed solutions

Practice

Write as many as tests you want until you self satisfied with the results.

Achieve

Make your dreams a reality with QB365 Learning app. Study the result oriented way

What is NEET exam? Why write it? [ நீட் தேர்வு தமிழ் வழி ]

NEET Tamil (National Entrance Cum Eligibilty Test), இந்தியாவில் இருக்கும் மாணவர்கள் மருத்துவத் துறையில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து மருத்துவப் படிப்புகளை (MBBS / BDS / BAMS / BSMS / BUMS / BHMS) படிப்பதற்கும் நீட் தேர்வு அவசியம். இதில் AIIMS (All India Institute of Medical Sciences) மற்றும் JIPMER (Jawaharlal Institute of Postgraduate Medical Education & Research) ஆகிய பல்கலைக்கழகங்களில் உள்ள மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களும் அடங்கும். இந்தியாவில் மட்டுமின்றி இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள கல்லூரிகள் மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றாலும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் நடத்தும் இத்தேர்வு அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்விற்கு ( All India Pre Medical Test ( AIPMT)) மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நுழைவுத் தேர்வானது அனைத்து அரசுக் கல்லூரிகளுக்கும் தனியார் கல்லூரிகளுக்கும் பொருந்தும்.

முன்னதாக மருத்துவப் படிப்புகளுக்கு இருந்த அனைத்து விதமான நுழைவுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு நீட் தேர்வே பிரதான தேர்வாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு NEET-UG தேர்வும், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு NEET-PG தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி, ஒடியா, உருது, பெங்காலி, தெலுங்கு, கன்னடா, அஸ்ஸாமி, மற்றும் குஜராத்தி ஆகிய மொழிகளில் நீட் தேர்வை எழுத முடியும். 2021-ல் இருந்து பஞ்சாபி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் சேர்க்கப்பட்டு மொத்தம் 13 மொழிகளில் நீட் தேர்வை எழுத முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

image

NEET Tamil (National Entrance Cum Eligibilty Test), இந்தியாவில் இருக்கும் மாணவர்கள் மருத்துவத் துறையில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து மருத்துவப் படிப்புகளை (MBBS / BDS / BAMS / BSMS / BUMS / BHMS) படிப்பதற்கும் நீட் தேர்வு அவசியம். இதில் AIIMS (All India Institute of Medical Sciences) மற்றும் JIPMER (Jawaharlal Institute of Postgraduate Medical Education & Research) ஆகிய பல்கலைக்கழகங்களில் உள்ள மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களும் அடங்கும். இந்தியாவில் மட்டுமின்றி இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள கல்லூரிகள் மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றாலும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு ஒரு தகுதிகாண தேர்வுதான் (qualifying test). அது ஒரு போட்டித் தேர்வு அல்ல (Not a competitive test).

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் உள்ள சுமார் 2500 MBBS இடங்கள் நீட் தேர்வில் தேறியோரைக் கொண்டே நிரப்பப் படும். தனியார் கல்லூரி இடங்கள் மற்றும் நிகர்நிலை பல்கலைகளின் இடங்கள் உட்பட தமிழ்நாட்டில் மொத்தமுள்ள அனைத்து இடங்களும் (PG மற்றும் UG) நீட் தேர்வில் தேறியோரைக் கொண்டு மட்டுமே நிரப்பப் படும்.

மொத்த மருத்துவ இடங்களில் 85 சதம் தமிழ்நாட்டில் வசிக்கும் மாணவர்களுக்கும் 15 சதம் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கும் வழங்கப்படும்.இது ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகிறது.இது அப்படியே தொடரும்.

நீட் தேர்வு காரணமாக தமிழக மாணவர்களின் இடங்கள் பறிக்கப்பட்டு விடும்; அவை வெளிமாநில மாணவர்களுக்கு வழங்கப்பட்டு விடும் என்பதெல்லாம் உண்மையல்ல. மருத்துவ இடத்தைப் பெறுவதற்கு,தமிழ்நாட்டில் வசிக்க வேண்டும் என்ற நிபந்தனை எவ்வித மாற்றமும் இன்றி நீடிக்கிறது.

தமிழ்நாட்டில் 69 சதம் இட ஒதுக்கீடு வழங்கப் படுகிறது. இது அப்படியே தொடரும். அதுபோல ஒவ்வொரு மாநிலத்திலும் நடப்பிலுள்ள இட ஒதுக்கீடு அப்படியே தொடரும்.

Screenshot

Put down your phone and focus on what's more important experience in your life with AppTo.

QB365 APPஐ ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

தமிழ் மீடியம் மாணவர்களுக்கு ஏற்றது . நீட் உயிரியல், இயற்பியல் மற்றும் வேதியியல் Subjects, வினா மற்றும் விடைகள், பயிற்சித்தேர்வுகள், மாதிரித்தேர்வுகள் QB365 - ஆப் இதோ -

இப்போது பதிவிறக்கம் செய்யவும்! QB365 - APP மூலம் படித்து வெற்றி பெறுங்கள்!

NEET Entrance Exam Syllabus 2024

நீட் தேர்வு தமிழ் – வேதியியல்

  • வேதியியலின் சில அடிப்படைக் கருத்துகள்
  • தனிமங்களின் வகைப்பாடும் ஆவர்த்தன பண்புகளும்
  • வேதிப்பிணைப்புகளும் மூலக்கூறு அமைப்பும்
  • சில அடிப்படைத் தத்துவங்கள் மற்றும் உத்திகள்
  • அணு அமைப்பு
  • ஹைட்ரஜன்
  • ஹைட்ரோகார்பன்
  • பருப்பொருளின் நிலைகள்
  • வெப்ப இயக்கவியல்
  • வேதிச் சமநிலை
  • சூழ்நிலை வேதியியல்
  • ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினைகள்
  • கரைசல்கள்
  • s -தொகுதி தனிமங்கள் (ஹைட்ரஜன், கார மற்றும் கார மண் உலோகங்கள்)
  • சில p-தொகுதி தனிமங்கள்
  • மின்வேதியியல்
  • தனிமங்களை தனிமைப்படுத்துதல் மற்றும் பிரித்தெடுத்தலின் பொதுவான தத்துவங்கள்
  • ஹேலோ அல்கேன்கள் மற்றும் ஹேலோ அரீன்கள்
  • பலபடிகள்
  • திண்ம நிலை
  • p-தொகுதி தனிமங்கள்
  • ஆல்கஹால், பீனால் மற்றும் ஈதர்கள்
  • வேதிவினை வேகவியல்
  • d மற்றும் f தொகுதி தனிமங்கள்
  • ஆல்டிஹைடுகள், கீட்டோன்கள் மற்றும் கார்பாக்ஸிலிக் அமிலங்கள்
  • அன்றாட வாழ்வில் வேதியியல்
  • புறப்பரப்பு வேதியியல்
  • அணைவுச் சேர்மங்கள்
  • நைட்ரஜன் சேர்மங்கள்
  • உயிர் மூலக்கூறுகள்

நீட் தேர்வு தமிழ் – இயற்பியல்

  • இயல் உலகத்தின் தன்மையும் அளவீட்டியலும்
  • வேலை, ஆற்றல் மற்றும் திறன்
  • இயக்கவியல்
  • நியூட்டனின் இயக்க விதிகள்
  • துகள்களின் அமைப்பு மற்றும் சுழல் இயக்கம்
  • ஈர்ப்பியல்
  • பருப்பொருட்களின் பண்புகள்
  • நல்லியல்பு வாயுவின் நடத்தை மற்றும் இயக்கவியல் கொள்கை
  • வெப்ப இயக்கவியல்
  • அலைவுகள் மற்றும் அலைகள்
  • நிலை மின்னியல்
  • மின்னோட்டவியல்
  • மின்னோட்டத்தின் காந்த விளைவு மற்றும் காந்தவிசை
  • மின்காந்தத் தூண்டல் மற்றும் மாறுதிசை மின்னோட்டம்
  • மின்காந்த அலைகள்
  • ஒளியியல்
  • மின்னணுக் கருவிகள்
  • தகவல் தொடர்பு அமைப்பு
  • கதிர்வீ ச்சு மற்றும் பருப்பொருளின் இருமைப்பண்பு
  • அணுக்கள் மற்றும் அணுக்கருக்கள்
  • பொருட்களின் காந்தப் பண்புகள்

நீட் தேர்வு தமிழ் – உயிரியல்

  • வாழம் உலகம்
  • உயிரியல் வகைப்பாடு
  • செல்: உயிரின் அலகு
  • உயிர் மூலக்கூறுகள்
  • செல் சுழற்சி மற்றும் செல் பகுப்பு
  • தாவர உலகம்
  • பூக்கும் தாவரங்களின் புற அமைப்பியல்
  • பூக்கும் தாவரங்களின் உள்ளமைப்பியல்
  • தாவரங்களில் கடத்துதல்
  • கனிம ஊட்டம்
  • விலங்குலகம்
  • விலங்குகளின் கட்டமைப்பு
  • மரபுரிமை மற்றும் மறுபாட்டின் கொள்கைகள்
  • மரபுரிமை மற்றும் மறுபாட்டியலின் மூலக்கூறு அடிப்படை
  • பரிணாம வளர்ச்சி
  • உயர் தாவரங்களின் ஒளிச்சேர்க்கை
  • தாவரங்களின் வளர்ச்சி
  • உணவு செரிமானம் மற்றும் உறிஞ்சுதல்
  • சுவாசம் மற்றும் வாயுக்களின் பரிமாற்றங்கள்
  • உயிரினங்களின் இனப்பெருக்கம்
  • பூக்கும் தாவரங்களின் பாலினப் பெருக்கம்
  • உடல் திரவங்கள் மற்றும் குருதிச் சுழற்சி
  • மனித இனப்பெருக்கம்
  • இனப்பெருக்க நலன்
  • உணவு உற்பத்தியின் விரிவாக்க உத்திகள்
  • மனித நலன்களில் நுண்ணுயிரிகள்
  • இயக்கம் மற்றும் இடம் பெயர்தல் ( எலும்புகள் மற்றும் தசைகள் )
  • நரம்பியல் கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைவு
  • இரசாயன இணக்கம் மற்றும் ஒருங்கிணைப்பு
  • மனித ஆரோக்கியம் மற்றும் நோய்கள்
  • உயிர் தொழில்நுட்பக் கொள்கைகள் மற்றும் செயல்முறைகள்
  • உயிர்த் தொழில்நுட்பம் மற்றும் அதன் பயன்பாடுகள்
  • உயிரினங்கள் மற்றும் தொகுப்பியல்
  • சூழல் மண்டலம்
  • பல்லுயிர்கள் மற்றும் அதன் பாதுகாப்பு
  • சுற்றுச்சூழல் பிரச்னைகள்
  • கழிவுப் பொருட்கள் மற்றும் கழிவு நீக்கம்
  • >தாவரங்களின் சுவாசித்தல்

NEET தமிழ் மீடியம் மாணவர்களுக்கு அழைப்பு!

நீட் தேர்வை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல நீங்கள் தயாரா? நீட் தமிழ் வழி மாணவ / மாணவியரின் நம்பிக்கையான மொபைல் ஆப் - ஏனென்றால் மருத்துவ நுழைவுத் தேர்வுகளின் உலகில் பிரகாசிக்க உங்களுக்கு உதவ QB365 APP இங்கே உள்ளது!

What is NEET exam? Why write it?

NEET Tamil (National Entrance Cum Eligibilty Test), இந்தியாவில் இருக்கும் மாணவர்கள் மருத்துவத் துறையில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து மருத்துவப் படிப்புகளை (MBBS / BDS / BAMS / BSMS / BUMS / BHMS) படிப்பதற்கும் நீட் தேர்வு அவசியம். இதில் AIIMS (All India Institute of Medical Sciences) மற்றும் JIPMER (Jawaharlal Institute of Postgraduate Medical Education & Research) ஆகிய பல்கலைக்கழகங்களில் உள்ள மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களும் அடங்கும். இந்தியாவில் மட்டுமின்றி இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள கல்லூரிகள் மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றாலும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் நடத்தும் இத்தேர்வு அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்விற்கு ( All India Pre Medical Test ( AIPMT)) மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நுழைவுத் தேர்வானது அனைத்து அரசுக் கல்லூரிகளுக்கும் தனியார் கல்லூரிகளுக்கும் பொருந்தும். NTA (National Testing Agency) என்னும் தனித்து செயல்படும் அமைப்பு தான் இந்தியாவில் நீட் தேர்வை நடத்துவது தொடங்கி அதற்கான முடிவுகளை வெளியிடுவது வரை நீட் தொடர்பான செயல்பாடுகளை கவனித்து வருகிறது. இந்த அமைப்பை இந்தியாவின் கல்வி அமைச்சகம் (முன்னதாக மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் என்ற பெயரில் இருந்தது) தான் உருவாக்கியது.

முன்னதாக மருத்துவப் படிப்புகளுக்கு இருந்த அனைத்து விதமான நுழைவுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு நீட் தேர்வே பிரதான தேர்வாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு NEET-UG தேர்வும், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு NEET-PG தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி, ஒடியா, உருது, பெங்காலி, தெலுங்கு, கன்னடா, அஸ்ஸாமி, மற்றும் குஜராத்தி ஆகிய மொழிகளில் நீட் தேர்வை எழுத முடியும். 2021-ல் இருந்து பஞ்சாபி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் சேர்க்கப்பட்டு மொத்தம் 13 மொழிகளில் நீட் தேர்வை எழுத முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு ஒரு தகுதிகாண தேர்வுதான் (qualifying test). அது ஒரு போட்டித் தேர்வு அல்ல (Not a competitive test).

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் உள்ள சுமார் 2500 MBBS இடங்கள் நீட் தேர்வில் தேறியோரைக் கொண்டே நிரப்பப் படும். தனியார் கல்லூரி இடங்கள் மற்றும் நிகர்நிலை பல்கலைகளின் இடங்கள் உட்பட தமிழ்நாட்டில் மொத்தமுள்ள அனைத்து இடங்களும் (PG மற்றும் UG) நீட் தேர்வில் தேறியோரைக் கொண்டு மட்டுமே நிரப்பப் படும்.

மொத்த மருத்துவ இடங்களில் 85 சதம் தமிழ்நாட்டில் வசிக்கும் மாணவர்களுக்கும் 15 சதம் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கும் வழங்கப்படும்.இது ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகிறது. இது அப்படியே தொடரும்.